டெலிகிராம் செய்தியிடல் ஒரு புதிய அம்சத்தை சேர்த்திருக்கிறது, இது வாட்ஸ்அப், லைன் மற்றும் KakaoTalk பயனர்கள் தங்கள் மெசேஜ்கள் அனைத்தையும் டெலிகிராமிற்கு நகர்த்த ஏதுவாக அமைத்துள்ளது.
வாட்ஸ்அப்பிற்கான சர்ச்சைக்குரிய தனியுரிமை ஒப்பந்தத்திற்காக பேஸ்புக் நிறைய பின்னடைவுகளை சந்தித்துள்ளது, இதனால் மில்லியன் கணக்கான மக்கள் சிக்னல், டெலிகிராம் போன்ற போட்டி தளங்களுக்கு ஆதரவாக வாட்ஸ்அப்பை புறக்கணிக்கத் தொடங்கியுள்ளனர். இப்போது, டெலிகிராம் இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக மாற்ற எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் விட்டுவிடவில்லை. அதிகமான வாட்ஸ்அப் பயனர்களை ஈர்க்கும் முயற்சியில், வாட்ஸ்அப் பயனர்கள் அவர்களுக்கு பிடித்த உரையாடல்களை இழக்காமல் டெலிகிராமில் இறக்குமதி செய்வதை எளிதாக்கியுள்ளது.
இது வாட்ஸ்அப்பிற்கு மட்டுமல்ல, டெலிகிராம் மற்ற 2 மெசேஜிங் இயங்குதளமான லைன் மற்றும் KakaoTalk ஆகியவற்றிற்கும் மெசேஜ்களை நகர்த்தவும் எளிதாக்கிருக்கிறது.
வாட்ஸ்அப் மெசேஜ்களை எவ்வாறு இறக்குமதி செய்வது:
Android இல்
வாட்ஸ்அப் மெசேஜைத் திறக்கவும், கிளிக் ⋮ > More > Export Chat, பின்னர் share மெனுவில் டெலிகிராம் தேர்வு செய்யவும்.
IOS இல்
வாட்ஸ்அப்பில் Contact Info அல்லது Group Info பக்கத்தைத் திறக்கவும், Export Chat கிளிக் செய்யவும், பின்னர் share மெனுவில் டெலிகிராம் தேர்வு செய்யவும்.
Here's how you can move your chats to Telegram if you're on Android. pic.twitter.com/VMq3mAeteq
— Telegram Messenger (@telegram) January 28, 2021
Move your message history from apps like WhatsApp, Line and KakaoTalk to Telegram. https://t.co/PediepRhyt pic.twitter.com/VPeuilGt2T
— Telegram Messenger (@telegram) January 28, 2021
செய்திகள் நடப்பு நாளில் நகர்ந்திருக்கும், ஆனால் மெசேஜ்களின் அசல் நேர முத்திரைகளும் எல்லோராலும் காண முடியும்.
டெலிகிராம் v7.4.0 இல் உள்ள பிற சேர்த்தல்களில் இரு தரப்பினருக்கான மெசேஜ்கள் மற்றும் அழைப்புகளை அகற்றுவதற்கான விருப்பங்களுடன் கூடிய அம்சமும் மற்றும் பங்கேற்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் குழுக்களை நீக்கும் அம்சமும் அடங்கும். voice மெசேஜ்கள் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் தனித்தனியாக தொகுதி அளவை சரிசெய்யும் திறன் இணைக்கப்பட்டிருக்கிறது, மேலும் உள்ளமைக்கப்பட்ட ஆடியோ பிளேயருக்குள் நீங்கள் வேகமாக முன்னோக்கியும், பின்னோக்கியும் நகர்த்தும் கட்டுப்பாட்டினை டெலிகிராம் இணைத்துள்ளது.
எவ்வாறாயினும், டெலிகிராமின் மெசேஜ்கள் End-to-End encryption இல்லை என்பதை நினைவில் கொள்க. நீங்கள் இது போல் பாதுகாப்பு மிக்க மெசென்ஜர் எதிர்பார்க்கிறீர்கள் என்றால் ஒவ்வொரு chat மெசேஜிலும் secret chat'ஐ டெலிகிராமில் இயக்க தயாராகுங்கள். இல்லையேல் சிக்னல் அல்லது வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துங்கள்.