WhatsApp ரசிகர்கள் ஒரு எச்சரிக்கையுடன் பகிர்ந்துள்ளனர் என்னவென்றால் மோசடி கும்பலானது WhatsApp Gold என ஆதாரமற்ற ஒரு அப்ளிகேஷனில் வைரஸ்’ஐ புகுத்தி அதை பதிவிறக்கம் செய்வோரின் மொபைலை கண்காணிக்க களம் இறங்கிருக்கிறது என பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
வைரஸை ஒரு அப்ளிகேஷன் மூலம் ஊடுருவதற்கு பயனர்களை ஏமாற்றி பதிவிறக்கம் செய்ய ஒரு பொய்யான செய்தியை வடிவமைத்து மீண்டும் WhatsApp வழியாக பரப்புகிறது.
WhatsApp வழியாக தொடர்ந்து ஒரு மறைக்கப்பட்ட பிரீமியம் அம்சம் புதிய WhatsApp Gold’ல் உள்ளது என்று மிக பொய்யான செய்தி பரவிக்கொண்டிருக்கிறது.
நீங்கள் பணம் செலுத்த தயாராக இருந்தால், நீங்கள் கூடுதல் அம்சங்களைக் கொண்ட WhatsApp Gold எனும் சிறப்பு பதிப்பை உபயோகப் படுத்த முடியும் எனவும் பதிவில் வரும்.
Facebook’ற்கு சொந்தமான WhatsApp, தொடக்கத்தில் ஒரு வருடாந்திர கட்டணம் வசூலித்தது ஆனால் 2016 ஜனவரி முதல் அக்கட்டணம் முற்றிலுமாக கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலே படத்தில் உள்ளதன் பொருள், மேம்படுத்தப்பட்ட WhatsApp Gold, வீடியோ அரட்டைகளை நடத்தவும், ஒரே நேரத்தில் 100 படங்களை அனுப்பவும், நீங்கள் அனுப்பிய செய்திகளை எத்தனை மணிநேரம் ஆனாலும் நீக்க முடியும் என போலியான செய்தி மூலம் உங்களுக்குத் தெரிவிக்கிறது
சைபர் பாதுகாப்பு நிறுவனமான Sophos has described the message as “half rubbish”, and calls the “martinelli” video a “fictional threat” and mentioned the threat category as below,
- ஒரு கற்பனையான அச்சுறுத்தல்: “martinelli” வீடியோ, வைரஸ் மற்றும் அது சம்பந்தம்பட்டதை உள்ளடக்கியது எனக் கூறப்படுவது.
- ஒரு உண்மையான அச்சுறுத்தல்: WhatsApp Gold, அது WhatsApp வழங்கும் ஒரு பிரத்யேகமான பிரீமியம் சேவை என கூறப்படுவது
இரண்டு வருடங்களுக்கு முன்னர், தீங்குவிளைப்பவர்கள், WhatsApp’ல் ஒரு இரகசிய அப்டேட் உள்ளது என்றும், இது பயனர்கள் பகிர்ந்து கொள்ளக்கூடிய மேம்பட்ட அம்சங்களை வழங்கியது என்றும் தெரிவித்தனர். தீங்குவிளைப்பவர்கள், ஒரு link’ஐ வழங்கி அதன் மூலம் WhatsApp Gold’ன் சிறப்பம்சத்தை செயல்படுத்த முடியும் என மக்களை நம்ப வைக்கின்றனர். ஆனால் உண்மையில் வைரஸையே மக்கள் பதிவிறக்கம் செய்கின்றனர்.
ஊடகங்கள் மூலம் பரவிய பின்னர், அது நிறுத்தப்பட்டது. ஆனால் இன்னமும் மற்ற தீங்குவிளைப்பவர்கள் ஏற்கனவே இருக்கும் தந்திரத்தை மறுபடியும் மாற்றி வடிவமைத்து, அவ்வப்போது அதை தொடர்ந்து பயிரிடுகிறார்கள். WhatsApp புதிய அம்சங்களை எப்பொழுதும் அறிமுகப்படுத்தி கொண்டிருக்கும். மேலும், நீங்கள் Playstore’லேயே அறிவிப்பைப் பெறுவீர்கள்.
Don’t get caught out by this creepy message and beware about this new Virus called “WhatsApp Gold” which is here to Hack & Ruin Your Phone.
உங்களுக்கு அச்செய்தி வந்தால் என்ன செய்ய வேண்டும்?
link’ன் மூலம் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்யவோ அல்லது மேம்படுத்த வழியுறுத்தியோ எந்த ஒரு செய்தியும் வந்தால் உடனே புறக்கணிப்பது நல்லது
WhatsApp தானாக புதுப்பித்தல்களை Playstore மூலமாக நிறுவும். ஆதலால் link’ன் மூலம் பதிவிறக்கம் செய்ய பயனர்களை WhatsApp கேட்டு கொள்ளாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், உங்கள் மொபைலை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள சில எளிய ஆலோசனையை பின்பற்றவும், உங்கள் நண்பர்களையும், குடும்பத்தினரையும் கேட்டுக் கொள்ளுமாறு அறிவுரை கூறவும்.
- பாதுகாப்பு புதுப்பித்தல்களை உடனடியாகப் பயன்படுத்த வேண்டும்.
- App Store அல்லது Google Play இல் இருந்து மட்டும் உங்கள் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து பயன் பெறவும்.