ஆப் ஸ்டோரில் வேறொரு நிறுவனத்தின் போலியான App'ஐ பட்டியலிட்டதின் மூலம், ஒரு ஐபோன் உபயோகிப்பாளர் அந்த App'ஐ பயன்படுத்தியதினால், $600,000 மதிப்புள்ள பிட்காயினை திருடு போக அனுமதித்தாக ஆப்பிள் நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர் Phillipe Christodoulou தனது ஐபோனில் install செய்த ஒரு App'ஐ கடந்த மாதம் (பிப்ரவரி) தனது சேமிப்பை சரிபார்க்க சென்றபோது போலியானது என்று கண்டுபிடித்தார். கிரிப்டோகரன்சி சேமிக்கும் கருவியின் தயாரிப்பாளரான “Trezor”ன் துணை App'ஆகக் கருதப்படும் இந்தப் App, உண்மையான நிறுவனத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்று தெரியவந்தது.
நீங்கள் விரும்பும் பதிவுகள்
Trezor ஒரு நம்பத்தகாத பிட்காயின் நிறுவனம் அல்ல. தனிப்பட்ட ஹார்ட்வேர் வாலட்டை வழங்கிய முதல் நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும், மேலும் இது ட்விட்டரின் CEO ஜாக் டோர்சியால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் Trezor ஒரு ஐபோன் பயன்பாட்டை கூட உருவாக்கவில்லை, அதன் U2F ஹார்ட்வேர் டோக்கன் ஐபோனுடன் இயங்காது. Trezor'ன் வலைத்தளம், “iOS இல் உங்கள் Trezor சாதனத்தைப் பயன்படுத்துவது தற்போது (இன்னும்) ஆதரிக்கப்படவில்லை” என்று கூறுகிறது, ஆனால் நீங்கள் தொழில்நுட்ப விவரக்குறிப்புகளில் நுழையாவிட்டால் அதை தவறவிடலாம்.
ஆனால், இதைக் கவனிக்காமல் அவர் தனது ஐபோனில் உள்ள App ஸ்டோரில் “Trezor” App'ஐ தேடியபொழுது. Trezor போலவே ஒரு App கிடைக்க அதுவும் ஐந்து நட்சத்திரங்கள் மதிப்பீட்டுடன் இருந்தன, அவை அனைத்தும் போலியானது போல் இல்லாமல் முறையான App போன்று தோன்றின, ஆனால் அவர் தனது வாலட்டை திறக்க தனது ஆதாரங்களை App'ல் பயன்படுத்திய பிறகு, அவர் வைத்திருந்த 17.1 பிட்காயின்கள் என்றென்றும் இல்லாமல் போய்விட்டன.
ஆப்பிளின் படி, அந்த போலி App'ஆனது ஆப் ஸ்டோரில் வந்த பிறகு அதன் நோக்கத்தை மாற்றுவது போல் உருவாக்கியிருக்கிறது. App'ன் பயன்பாடானது மதிப்பாய்வுக்கான "கிரிப்டோகிராஃபி" பயன்பாடாக வழங்கப்பட்டது, மேலும் "இது எந்த கிரிப்டோகரன்சியிலும் ஈடுபடவில்லை", இது ஜனவரி 22 முதல் App ஸ்டோரில் தோன்ற அனுமதித்திருக்கிறது.
அதன் பிறகு, அந்த App'ன் பயன்பாட்டின் நோக்கத்தை கிரிப்டோகரன்சி வாலட்டாக மாற்றியிருக்கிறது, இது ஆப்பிள் அனுமதிக்காத ஒரு நடவடிக்கையாகும். Trezor இந்த போலி App'ஐ பற்றி தெரிவித்த பின்னர், ஆப்பிள் அதை அகற்றி மற்றும் அதை உருவாக்கிய டெவலப்பரையும் தடைசெய்தது, ஆனால் அதைத் தொடர்ந்து App ஸ்டோரில் மற்றொரு போலியான Trezor App போல் வந்தடைந்தது.
டிசம்பர் 2, 2020 அன்று, ஹார்ட்வேர் வாலட் உற்பத்தியாளர் கூகிளின் பிளே ஸ்டோரில் இதேபோன்ற மோசடி App குறித்து ட்வீட் செய்தார். "Trezor சாதனங்களை வைத்திருக்கும் அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் ஒரு எச்சரிக்கை" என்று நிறுவனம் அப்போது எச்சரித்தது. “இந்த App ஒரு மோசடி மற்றும் SatoshiLabs மற்றும் Trezorருடன் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் இதை ஏற்கனவே Google குழுவுக்கு புகாரளித்துள்ளோம். உங்கள் சாதனத்தில் எந்தவொரு செயலையும் எப்போதும் உறுதிப்படுத்திக்கொண்டு, Trezor உங்களிடம் கேட்காத வரை மறைமுக சொற்களை ஒருபோதும் தட்டச்சு செய்ய வேண்டாம்.”
இப்போது Christodoulou திருடர்களினால் வருத்தமடைந்துள்ளார், ஆனால் அவர் தனது கோபத்தின் பெரும்பகுதியை Trezor மீதில்லாமல் பயனர்களுக்கான நம்பகமான App'ஐ அனுமதித்ததற்காக ஆப்பிள் நிறுவனத்தின் மேல் வைத்திருக்கிறார். Christodoulou வாஷிங்டன் போஸ்ட்டிடம் "நான் அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை உடைத்து அவர்கள் துரோகம் செய்தனர்" என்று கூறினார்.
இருப்பினும், நீங்கள் ஆப்பிள் ஸ்டோர் அல்லது கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து App'ஐ டவுன்லோட் செய்யும்போது கவனமாக இருங்கள். உங்கள் தரவு, நிதி போன்றவற்றைத் திருட போலி App'கள் பெரும்பாலும் பசியுடன் இருக்கின்றன.