ஒரு மென்பொருள் பிழை 6.8 மில்லியன் Facebook பயனர்கள்களின் புகைப்படங்களை வெளிப்படுத்தியது, பயனர்கள் Facebook-ல் வெளியிடாத புகைப்படங்கள் உட்பட. செப்டம்பர் மாதத்தில் பல மூன்றாம் தரப்பு அப்ளிகேஷன்கள் 12 நாட்களாக “வழக்கமானதை விட ஒரு பரந்த தொகுப்பு புகைப்படங்களை” அணுகி இருந்தது, என Facebook கூறியுள்ளது.
Facebook இன்னும் நிறைய தனியுரிமை சிக்கல்களைக் கொண்டுள்ளது. Facebook-ன் ஒரு பிழை ஏறக்குறைய 7 மில்லியன் பயனர்களின் புகைப்படங்களை மூன்றாம் தரப்பு ஆப்களுக்கு வழங்கியிருக்கலாம் என வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது.
தோமர் பார், Facebook-ன் பொறியியல் இயக்குனரான இவர் ஒரு வலைதளப்பதிவில் அப்பிழையினால் 1,500 அப்ளிகேஷன்களுக்கு தொடர்பு உள்ளதாகவும், அது செப்டம்பர் 13 மற்றும் செப்டம்பர் 25 க்கு இடையில் 876 மேம்பாட்டாளர்களை பாதித்திற்கிறது என்றும் கூறியுள்ளார்.
பயனர்கள் தங்கள் புகைப்படங்களை மூன்றாம் தரப்பு அப்ளிகேஷனுக்கு அனுமதிக்கும்போது, அது பயனர்களின் timeline-ல் பதிவு செய்த புகைப்படத்திற்கு மட்டும் அந்த அனுமதியானது பொருந்தும். ஆனால் இப்பிழையானது மூன்றாம் தரப்பு அப்ளிகேஷனின் மேம்பாட்டாளர்களுக்கு பயனர் timeline-ல் பதிவிட்ட புகைப்படத்தை தவிர, private மற்றும் stories-ல் வைத்திருந்த புகைப்படத்தையும் அணுக வழி வகுத்துள்ளது.
இச்செய்தியை Facebook-ன் அப்ளிகேஷன்களை உருவாக்கும் மேம்பாட்டாளர்களுக்கு கண்டுபிடிக்க இலக்கு என ஒரு வலைப்பதிவில் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு பேஸ்புக் மீது தனியுரிமை மீறல்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் தருணத்தில் ஒரு பரந்த விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சம்பவத்தினையும் விசாரணையும் ஐரிஷ் தரவு பாதுகாப்பு ஆணையரால் நடந்து கொண்டிருக்கிறது.
ஐரோப்பிய கட்டுப்பாட்டாளர்களுக்கு இரண்டு மாதங்களாக இம்மீறல்களை பற்றி ஒன்றும் வெளிப்படுத்தாததற்காக Facebook-ற்கு அபராதம் விதிக்கக் கூடும்.
இந்த நிறுவனத்தின் பிரச்சனைகள் Facebook-ன் பயனர்களை மட்டும் பாதிக்கவில்லை, ஊழியர்கள் மற்றும் டெக்னாலஜி தொழில் செய்வோர்களையும் பெரிதாக பாதிப்புக்குள்ளாக்கும். CEO மார்க் ஜுக்கர்பெர்க் இந்த ஆண்டு தொடக்கத்தில் காங்கிரசில் “உங்களுடைய தரவைப் பாதுகாக்க எங்களுக்கு முழு பொறுப்பு உள்ளது, மற்றும் அப்படி செய்யாவிட்டால் உங்களுக்கு சேவை செய்ய நாங்கள் தகுதியற்றவர்கள்” என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த வாரம், Facebook பயனர்கள் பிழையின் மூலம் தாக்கத்தை ஏற்படுத்துவதைத் தீர்மானிக்க அப்ளிகேஷன் மேம்பாட்டாளர்களுக்கு கருவிகளை பேஸ்புக் வழங்குவதோடு Facebook பயனாளர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் எச்சரிக்கை செய்தி மூலம் நேரடியாக அறிவிக்கப்படும்.
அடுத்த வாரம், Facebook பயனர்கள் பிழையின் மூலம் தாக்கத்தை ஏற்படுத்துவதைத் தீர்மானிக்க அப்ளிகேஷன் மேம்பாட்டாளர்களுக்கு கருவிகளை பேஸ்புக் வழங்குவதோடு Facebook பயனாளர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் எச்சரிக்கை செய்தி மூலம் நேரடியாக அறிவிக்கப்படும்.
உங்கள் Facebook புகைப்படங்கள் இப்பிழை மூலம் பாதிக்கப்பட்டுள்ளதா என சரிபார்க்க.
உங்கள் கணக்கைச் சரிபார்க்க, இந்த பக்கத்தைப் க்ளிக் செய்யவும், உங்கள் பேஸ்புக் கணக்கில் உள்நுழைய விவரம் கேட்டால் கொடுக்கவும்.
கீழே உள்ள சிறிய பெட்டியில் உங்கள் கணக்கு பாதிக்கப்பட்டுள்ளதா என உங்களுக்கு விளக்கம் காண்பிக்கும், அது என்னவென்று நீங்கள் சரி பார்த்து கொள்ளலாம்.