அக்டோபர் மாதம், WhatsApp ஆனது அதன் வலைப்பதிவு ஒன்றில் மூன்றாம் தரப்பு பொறியாளர்களுக்கு ஆதரவு சேர்க்கும் வகையில், Android மற்றும் iOS பயனர்களுக்கான WhatsApp ஸ்டிக்கர் ஆப்களை உருவாக்கலாம் என அறிவித்திருந்தது.
ஆப்பிள் பயனர்கள் இனி தங்கள் சொந்த விருப்பப்படி WhatsApp ஸ்டிக்கர்களை உருவாக்க முடியாது. காரணம்? ஆப்பிள் நிறுவனத்தின் வழிகாட்டுதல்களை மீறுவதாக இருப்பதால் ஆப் ஸ்டோரிலிருந்து அனைத்து மூன்றாம் தரப்பு WhatsApp ஸ்டிக்கர் ஆப்களை நீக்கி வருகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் பொறியாளர் வழிகாட்டுதல்களை மீறுவதாக இந்த ஆப்கள் கண்டறியப்பட்டுள்ளன.
WhatsApp ரசிகர் தளமான WABetaInfo, ஸ்டிக்கர் நீக்குவதற்கான மூன்று முக்கிய காரணங்களை ட்விட்டரில் வழங்கியுள்ளது.
Apple is reporting that all WhatsApp Stickers are violating their guidelines. The main reasons:
1) There are too much apps with similar behavior.
2) It requires WA to be installed. Apps should not require another apps.
3) The design of these apps is the same. https://t.co/L86KCYeSBV— WABetaInfo (@WABetaInfo) November 18, 2018
“Google Play Store அல்லது Apple App Store இல் உள்ள மற்ற ஆப்களை போல் உங்கள் ஸ்டிக்கர் ஆப்களை வெளியிடும்படியும் மற்றும் அதை பதிவிறக்கம் செய்வதன் மூலம் WhatsApp க்குள் அந்த ஸ்டிக்கர்களை பயனர்கள் அனுப்புவதைத் தொடங்க முடியும்” என வடிவமைப்பாளர்களை கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இந்த அறிவிப்புக்குப் பிறகு, ஆப்பிள் ஆப் ஸ்டோரில் புதிய ஸ்டிக்கர் ஆப்கள் வெள்ளம் போல் குவிய தொடங்கியது. ஆப்கள் பிற ஆப்களை சார்ந்து செயல்பட கூடாது என்றும் அதற்கு மாறாக ஸ்டிக்கர் ஆப்களை WhatsApp நிறுவ வேண்டும் என ஆப்பிள் நிறுவனம் வாதிடுகிறது.
இந்த அம்சமானது பயனர்கள் ஸ்டிக்கர்களை சேர்த்து உரையாடல்களை மிகவும் வேடிக்கையாகவும் மற்றும் ஒருவருக்கொருவர் அரட்டை அடிப்பதற்கு வகுக்குகிறது. Cuppy, Salty, Komo, Bibimbap Friends, Unchi & Rollie, Shiba Inu, The Maladroits, Koko, Hatch, Fearless and Fabulous, Banana, and Biscuit என 12 பிரபல ஸ்டிக்கர்களை கொண்டிருக்கும் ஒரு பேக்காக WhatsApp முன்னையே வெளியிட்டுள்ளது. பட்டியலில் கூடுதல் ஸ்டிக்கர்களை சேர்க்க, பயனர்கள் கூடுதல் ஸ்டிக்கர்களைப் பெற “+” ஐகானைத் தட்டியவுடன் Play Store க்கு நேரடியாக அனுப்பப்படுவார்கள், அங்கே சில இலவச மற்றும் சில கட்டணம் வசூலிக்கப்படும் ஸ்டிக்கர் பேக்குகளின் பட்டியலைக் காணலாம். இந்த ஸ்டிக்கர்கள் WaStickerApps என அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு காண்பிக்கும். பயனர்கள் அவர்கள் விரும்பும் WhatsApp க்கான ஸ்டிக்கர் பேக்குகளை நீக்கவும் சேர்க்கவும் முடியும்.
இருப்பினும், இது பற்றி அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் ஆப்பிள் அல்லது WhatsApp’ஆல் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.