Skip to content

எனது தனிப்பட்ட டேட்டா ஏற்கனவே 533 மில்லியன் பேஸ்புக் பயனர்களுடன் கசிந்துள்ளது, உங்களுடையதை எவ்வாறு சரிபார்ப்பது?

500 மில்லியனுக்கும் அதிகமான பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட டேட்டா ஆன்லைனில் மதிப்பு குறைந்த அளவிலான ஹேக்கிங் ஃபோரமில் வெளியிடப்பட்டுள்ளது. விபரங்களில் தொலைபேசி எண்கள், முழு பெயர்கள், இருப்பிடம், மின்னஞ்சல் முகவரி மற்றும் வாழ்க்கை வரலாற்று தகவல்கள் உள்ளன.

தொலைபேசி எண்கள், முழு பெயர்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் போன்ற தனிப்பட்ட தகவல்கள் உட்பட நூற்றுக்கணக்கான மில்லியன் பேஸ்புக் பயனர்களின் டேட்டா ஆன்லைனில் கசிந்தது, என பிசினஸ் இன்சைடர் குறிப்பிட்டுள்ளது. 106 நாடுகளில் 533 மில்லியன் பயனர்களிடமிருந்து கசிந்த டேட்டா ஒரு தெளிவற்ற ஹேக்கிங் ஃபோரமில் வெளியிடப்பட்டது. அந்த டேட்டாவானது ஒரு வருடத்திற்கும் மேலானது என்று நம்பப்படுகிறது, ஆனால் பாதுகாப்பு வல்லுநர்கள் இந்த தகவலை ஹேக்கெர்ஹலால் அடையாள மோசடிக்கு பயன்படுத்த முடியும் என்று கூறுகின்றனர்.

நீங்கள் விரும்பும் பதிவுகள்

இது ஏற்கனவே வேறு சில பகுதிகளிலிருந்து கசிந்த அல்லது அகற்றப்பட்ட அனைத்து வகையான தகவல்களாகும், ஆனால் இது எல்லா டேட்டாவையும் ஒன்றாக இணைக்கும் மற்றொரு ஆதாரமாகும் - மேலும் ஒவ்வொரு பாதிக்கப்பட்டவருடனும் அதை இணைப்பதால் மோசடி செய்பவர்கள், phishers மற்றும் spammers'களுக்கு நேர்த்தியான சுயவிவரங்களை வழங்கும் வெள்ளி தட்டாகும்.

பேஸ்புக் (FB) இந்த தரவு முன்னர் 2019 ஆம் ஆண்டில் நிகழ்ந்ததாக அறிவித்தது. "இந்த சிக்கலை நாங்கள் 2019 ஆகஸ்டில் கண்டுபிடித்து சரிசெய்தோம்" என்று பேஸ்புக் செய்தித் தொடர்பாளர் ஆண்டி ஸ்டோன் பல செய்தி சேனல்களிடம் தெரிவித்தார்.

மேலும், பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தொலைபேசி எண்கள் 2021 ஜனவரியில் டெலிகிராம் செய்தி சேவையில் ஒரு பயனருக்கு $20 க்கு கிடைத்தன.

நான்கு மாதங்களுக்குள் மற்றொரு டேட்டா மீறல் நடந்துள்ளது. அதே முழு வெளிப்படுத்தப்பட்ட டேட்டா, ஹேக்கிங் ஃபோரமில் இலவசமாகவும், அடிப்படை டேட்டா திறன்களைக் கொண்ட எவருக்கும் பரவலாகவும் வெளியிடப்பட்டுள்ளது.

HaveIBeenPwned மீறல்-அறிவிப்பு வலைத்தளத்தை இயக்கும் ஆஸ்திரேலிய பாதுகாப்பு ஆராய்ச்சியாளரான டிராய் ஹன்ட், ஹேக்கிங் ஃபோரமில் காண்பிக்கப்படும் 533 மில்லியன் தொலைபேசி எண்களைச் சேர்த்துள்ளார். இங்கே, நீங்கள் உங்கள் ஈமெயிலை கூட தேடலாம், ஆனால் தேடல் முடிவுக்காக சில மில்லியன் மின்னஞ்சல்களை மட்டுமே அவரிடம் கிடைத்தது என்று டிராய் ஹன்ட் கூறினார்.

எனவே, எனது சொந்த ஈமெயில் ஐடி மற்றும் தொலைபேசி எண்ணைத் தேட முயற்சித்தேன். இதன் விளைவாக, அந்த 533 மில்லியன் பேஸ்புக் பயனர்களிடையே எனது தனிப்பட்ட விவரங்களும் கசிந்துள்ளன. உங்கள் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்ணையும் இதில் தேடி முயற்சிக்கவும், தொலைபேசி எண் கீழே உள்ள படத்தில் உள்ளதைப் போல சர்வதேச வடிவத்தில் இருக்க வேண்டும்

ஒரு வலைப்பதிவு கட்டுரையில் (ஏப்ரல் 6) "தொலைபேசி எண்களைத் தேட நான் ஒருபோதும் திட்டமிடவில்லை" என்றும் "பேஸ்புக் டேட்டா அதையெல்லாம் மாற்றியது." டிராய் ஹன்ட் விளக்கினார்.

ப்லீப்பிங் கம்ப்யூட்டர் அறிக்கையின்படி, டேட்டா கசிவில் பேஸ்புக்கின் நிறுவனர்களில் மூன்று பேரின் தொலைபேசி எண்கள் உள்ளன - மார்க் ஜுக்கர்பெர்க், கிறிஸ் ஹியூஸ் மற்றும் டஸ்டின் மொஸ்கோவிட்ஸ், பேஸ்புக்கில் முதலில் பதிவுசெய்யப்பட்ட 4, 5 மற்றும் 6 வது உறுப்பினர்கள் ஆவர்.

பேஸ்புக் கசிவுக்கு எதிராக உங்கள் தொலைபேசி எண்ணைச் சரிபார்க்க குறைந்தபட்சம் ஒரு வலைத்தளத்திற்கு மேல் நான் பார்த்திருக்கிறேன். இது உங்கள் டேட்டாவைப் பெறுவதற்கு scammer'கள் அமைக்கக்கூடிய விஷயமாக இருப்பதால், HaveIBeenPwned மட்டும் உபயோகித்து கொள்ளுமாறு நான் பரிந்துரைக்கிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

தமிழ்