Site icon MTStrives

Google Play Store இலிருந்து 13 மால்வேர் பாதிக்கப்பட்ட Android ஆப்கள் நீக்கப்பட்டுள்ளது

Play store game malware

மோசமான மால்வேறால் பாதிக்கப்பட்ட 13 விளையாட்டு ஆப்களை Google Play Store இல் 500,000 க்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

ஒரு ஹேக்கர் குழுவானது, Google Play Store இல் 13 “விளையாட்டு ஆப்கள்” ஐ நிறுவி கண்காணித்து கொண்டிருக்கிறது என்றும் 560,000 தடவையும் மேலாக விளையாட்டு பிரியர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர் என்றும் ஒரு பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்து இருக்கிறார்.




ESET இலிருந்து ஒரு மூத்த மால்வேர் ஆராய்ச்சியாளர் Lukas Stefanko மூலம் கண்டுபிடிக்கப்பட்டது, சைபர் க்ரிமினலால் வெளியிடப்பட்ட இந்த விளையாட்டு ஆப்கள் Luiz O Pinto என்ற ஒரே பெயரில் உள்ளது, அந்த ஆப்கள் முறையான செயல்பாடு இல்லாதபோதிலும் Google Play Trending வரிசையில் இடம் பெற்றுள்ளது.

இது எப்பொழுது வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர் என்றால் ஒரு முறை மொபைலில் அந்த ஆப்பினை நிறுவப்பட்டால் அது ஒழுங்காக செயல்படாது மற்றும் பயனர் விளையாட்டு ஆப்பினை திறக்க முயற்சிக்கும் போதெல்லாம் செயலிழக்கச் செய்கிறார்கள். காலப்போக்கில், அவர்கள் மொபைல் திரையில் பயனர் பார்வையிலிருந்து தங்கள் ஐகானை மறைக்கிறார்கள் பிறகு சீரற்ற வகையில், புதிய ஆப்பான Game Center’ஐ நிறுவ கேட்கும், பயனருக்கு மீண்டும் செயல்பாட்டு நோக்கம் இல்லாமல் போகும். ஆனால் சில பயனர்கள் சந்தேகிக்காமல் அதை நிறுவிய பின், காலப்போக்கில் பயனரின் ஒப்புதல் இல்லாமல் முக்கியமான தகவல்களைத் திருடுவதற்கு மொபைல் பின்னணியில் மால்வேரை நிறுவவும் பயன்படுத்தப்படுகிறது.

Google ஆல் அகற்றப்பட்ட தீங்கிழைக்கும் ஆப்களின் பட்டியல்,

மேலே உள்ள பயன்பாடுகளில் ஒன்றை நீங்கள் பதிவிறக்கியிருந்தால், உங்கள் புகைப்படங்கள், மெசேஜ்கள் மற்றும் நீங்கள் வைத்திருக்க விரும்பும் எல்லாவற்றையும் பாதுகாப்பாக எடுத்து வைத்து உங்கள் மொபைலை factory reset செய்வது உங்களுக்கு சிறந்ததாக அமையும். இது மிக கடுமையானதாக இருந்தால், மால்வேரை அகற்றுவதற்காக, Digital Trends பரிந்துரைப்பது போல் Malwarebytes போன்ற ஆப்பை பதிவிறக்குவதன் மூலம் நீங்கள் பாதிப்பை ஏற்படுத்தும் பயன்பாட்டை நிறுவுவதற்கு முயற்சி செய்யலாம்.

கூகுள் இந்த எபிசோடில் இருந்து ஒரு படிப்பினை கற்றுக்கொள்வதோடு அல்லாமல், Play Store இல் வரும் ஆப்களைத் உறுதி செய்ய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு அதன் கொள்கையை அதிகரிக்க செய்ய வாய்ப்புள்ளது.